'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இசை அமைப்பாளர்கள் நடிகர்களாகவது ஒன்றும் புதிதில்லை. இளையராஜாவைத் தவிர பெரும்பாலான இசை அமைப்பாளர்கள் நடிகர்களாகி உள்ளனர். எம்.எஸ்.விஸ்நாதன் முதல் விஜய் ஆண்டனி, ஹிப்ஹாப் ஆதி வரை நடிக்கிறார்கள். ஆனால் முதன் முதலில் நடிகரான இசை அமைப்பாளர் பாபநாசம் சிவன். அவருக்கு முன் ஒரு சில பாடகர்கள், சில படங்களுக்கு இசை அமைத்தவர்கள் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நட்சத்திர இசை அமைப்பாளராக இருந்த பாபநாசம் சிவன் தான் முழுமையான திரைப்பட இசை அமைப்பாளர்.
1936ம் ஆண்டு வெளியான 'குசேலா'படத்தில் அவர் குசேலாவாக நடித்தார். இந்த படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி, மணி பாகவதர், பால சரஸ்வதி உள்பட பலர் நடித்தார்கள். பாபநாசம் சிவனே இசை அமைத்தார். படத்தில் 30 பாடல்கள் இடம் பெற்றது. இந்த படத்திற்கு பிறகு குபேர குசேலா, தியாக பூமி, பக்த சேதா ஆகிய படங்களில் நடித்தார் பாபநாசம் சிவன்.