நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' |

இலங்கையில் தமிழ் படங்கள் அதிக அளவில் ஓடும் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி நடித்த படங்கள் தான். ஆனால் கமல் நடித்த 'குரு' படம் இலங்கையில் மூன்று தியேட்டர்களில் 1050 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.
தமிழில் அதிக அளவில் படங்கள் ரீமேக் ஆகி வந்த காலத்தில் ஹிந்தியில் வெற்றி பெற்ற 'ஜுன்னு' என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்தான் 'குரு'. அதில் தர்மேந்திரா நடித்திருந்தார். இதில் கமல் நடித்திருந்தார். பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழை மக்களுக்கு உதவும் ராபின்ஹுட் கதை.
கமல் விதவிதமாக புத்திசாலித்தனமாக கொள்ளை அடிப்படிதுதான் படத்தின் திரைக்கதை. இளையராஜாவின் இசையில் ‛‛பறந்தாலும் விட மாட்டேன், பேரை சொல்லவா அது நியாயமாகுமா, எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா... வா...'' போன்ற பாடல்கள் ஹிட்டானது. கமல், ஸ்ரீதேவியுடன் ஒய்ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்க, ஐ.வி.சசி இயக்கினார். இதில் கமல் பல வேடங்களில் பல குரலில் பேசி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




