'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படங்களுக்கு இசை அமைப்பதோடு அதில் சம்பாதிக்கும் பணத்தை இசை தொடர்பான, சினிமா தொடர்பான நிறுவனங்கள் தொடங்கி முதலீடு செய்து வருகிறார். ஏற்கெனவே இசை பள்ளி நடத்தி வரும் ஏ.ஆர்.ரஹ்மான், கோடம்பாக்கத்திலும், புறநகரிலும் நவீன ஒலிப்பதிவு ஸ்டூடியோக்களை கட்டி உள்ளார். மும்பை மற்றும் லண்டனிலும் ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டூடியோக்கள் உள்ளன.
சென்னை கும்பிடிபூண்டி அருகே உள்ள கவரப்பேட்டையில் ஏஆர்ஆர் பிலிம் சிட்டியை அமைத்துள்ளார். அங்கு தற்போது விர்சுவல் (மெய்நிகர்) எனப்படும் நவீன தொழில்நுட்பத்தில் படத்தை உருவாக்கும் 'யூஎஸ் ட்ரீம்' என்ற நவீன இசை தயாரிப்பு கூடத்தை திறந்துள்ளார். இதன் திறப்பு விழாவில் இயக்குனர்கள் மணிரத்னம், சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் நிருபர்களிடம் கூறும்போது 'ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் ஆந்திரா, மும்பை ஆகிய இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை. ரயில் நிலையம், கோயில் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பிற்காக நீண்டநாட்கள் அனுமதி கிடைக்காத பட்சத்தில் அங்கு ஓரிருநாள் படப்பிடிப்பு நடத்திய பிறகு, பிரத்யேக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எஞ்சிய படப்பிடிப்பை இந்த ஸ்டுடியோவில் முடித்து கொள்ளலாம்”என்றார்.