ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
'நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அபிநயா. இயற்கையிலேயே செவித்திறன், பேசும்திறன் குறைபாடுள்ள அபிநயா பல படங்களில் நடித்து சாதித்தார். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ம் அறிவு, வீரம், தனி ஒருவன், குற்றம் 23, மார்க் ஆண்டனி உள்பட பல படங்களில் நடித்தார்.
தற்போது அவர் நாயகியாக நடித்துள்ள படம் 'பிள்ளையார்சுழி'. சிலம்பரசி என்பவர் தயாரித்துள்ள இந்த படத்தில் தீரஜ் இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ரேவதி, மைம் கோபி, சீனிவாசன், மேத்யூ வர்கீஸ் நடித்துள்ளனர். பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன், அருவி இசை அமைத்துள்ளனர்.
படம் குறித்து தீரஜ் கூறியதாவது : நியூயார்க், சிலோன் திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றுள்ள இப்படத்தில், விசேஷ குழந்தைகளுக்கு நமது சமூகம் எந்தளவு ஆதரவு தருகிறது என்று சொல்கிறோம். விசேஷ பள்ளிக்கு சென்று, அவர்களின் வாழ்க்கை குறித்து கண்டறிந்தேன். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பேசுவதோடு, அதற்கு தீர்வையும் சொல்கிறோம் என்றார்.