நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

‛நாடோடிகள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் அபிநயா. வாய் பேச முடியாத இவர் நடிப்பில் அசத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடிக்கிறார். விஷாலும், இவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்யப்போவதாகவும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.
இதுபற்றி ஒரு பேட்டியில் அபிநயா கூறுகையில், ‛‛விஷால் எனக்கு காதல் புரொபஸ் பண்ணாரு, திருமணம் செய்யப்போறோம் என தப்பான செய்திகள் பரப்புறாங்க, அதையெல்லாம் நம்பாதீங்க, அது எதுவுமே உண்மையில்லை, முட்டாள்தனமானது. அவுங்க ஏதோ வயித்து பிழைப்பிற்காக பேசுறாங்கனு விட்டுவிடுவேன். என்னவேணா சொல்லுங்க, நான் பெரிதாக எதையும் கண்டுக்கொள்வதில்லை'' என்றார்.
மேலும் ‛‛நான் ஒரு ரிலேசன்ஷிப்பில் இருக்கிறேன். எனக்கு பாய் பிரண்ட் இருக்காரு, 15 வருடம் அவரை தெரியும். சின்ன வயதில் இருந்தே எனக்கு நண்பர். நாங்க பேசி பழகுனோம் அதன்பின் காதல் ஆனது. நல்ல மனிதர். திருமணத்தை பற்றி இன்னும் யோசிக்கவில்லை, அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது'' என்றார்.