ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் |

'நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அபிநயா. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவை சேர்ந்த இவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் அவரது நடிப்புத் திறமையால் பலரது பாராட்டுக்களையும் பெற்றவர். தற்போது தமிழில் மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

அபிநயா 15 ஆண்டுகளாக வெகசனா கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். கார்த்திக் ஐதராபாத்தை சேர்ந்தவர். அபிநயா போன்று இவரும் பேச்சு மற்றும் செவித்திறன் சவால் கொண்டவர். சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. கார்த்திக் போட்டோவையும் சமீபத்தில் தான் வெளியிட்டார் அபிநயா. தொடர்ந்து திருமணம் தொடர்பான நிகழ்வுகள் நடந்து வந்தன.

இந்நிலையில் அபிநயா - வெகசனா கார்த்திக் திருமணம் ஐதராபாத்தில் குடும்ப பாரம்பரிய முறைப்படி நடந்தது. மணமக்கள் இருவரும் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் வைரலாகின.