பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் |

தொழில்நுட்ப வசதிகள் பெரிய அளவில் வளர்ச்சி காணாத 1960களின் ஆரம்பத்தில் புதுமை இயக்குநர் சிவி ஸ்ரீதர் தனது படக் குழுவினரோடு காஷ்மீர் சென்று, பெரும்பாலான காட்சிகளை அங்கு தங்கியிருந்து 52 நாட்களில் படமாக்கிய திரைப்படம் தான் “தேன்நிலவு”.
ஸ்ரீதரின் “சித்ராலயா” தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் மற்றும் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையோடு வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா, எம் என் நம்பியார், வசந்தி பிஏ, கேஏ தங்கவேலு, எம்.சரோஜா ஆகியோர் நடித்தனர். பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான ஏஎம் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்கள் அத்தனையும் தேன் போன்று இனிமையான ரகம்.
ஸ்ரீநகரில் இருந்து மிக தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கியிருந்துதான் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தது படக்குழு. காஷ்மீரில் எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எடுத்து முடித்து, பின் சென்னை திரும்பி அவைகளை எல்லாம் பிரிண்ட் போட்டு பார்த்து, சரிவராத காட்சிகளை மீண்டும் காஷ்மீர் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது சாத்தியமற்ற ஒன்று.
இதனால் அதுவரை எடுத்த படச்சுருள்களின் நெகட்டிவ்வை சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணனிடம் தந்து, அவர் அதை எடுத்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை வந்து 'விஜயா லேபரட்டரி”யில் பிரிண்ட் போட்டு, மீண்டும் விமானம் மூலம் காஷ்மீர் சென்று கொடுத்துள்ளார். அங்கே படக்குழு தங்கியிருந்த கிராமத்தில் உள்ள ஒரு தியேட்டரில் அனுமதி பெற்று, அங்கு இரவுக் காட்சி முடிந்ததும் இரவு ஒரு மணிக்கு மேல் அந்த புரொஜக்டரில் இவர்கள் எடுத்த “தேன்நிலவு” படக்காட்சியை இயக்குநர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, ஜெமினிகணேசன், வைஜெயந்திமாலா, நம்பியார் ஆகியோர் திரையிட்டுப் பார்த்தனர்.
அதன்பின் அதிகாலை 3 மணிக்கு உறங்கச் சென்று, மீண்டும் காலை 6 மணிக்கு படப்பிடிப்பைத் தொடங்கி, திருப்தி தராத காட்சிகளை மறு படப்பிடிப்பு நடத்தி எடுத்து முடித்திருக்கின்றனர். இத்தனை சிரமங்களைக் கடந்து வந்துதான் இந்த “தேன்நிலவு” திரைப்படம் திரையில் தோன்றி நம்மை மகிழ்வித்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும் இத்தருணம், அன்றைய திரைக்கலைஞர்கள் தொழில் மீது காட்டிய அற்பணிப்பு எத்தகைய உன்னதமானது என்பது இதன் மூலம் நாம் அறியலாம்.




