15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் நமீதா. அதன் பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் அளவுக்கு அதிகமாக எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தது. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லாமல் கலை நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாக்களுக்கு சென்று வந்தார். தற்போது பாவ் பாவ் என்ற படத்தை அவரே தயாரித்து, நடித்து வருகிறார்.
மது மற்றும் புகை பழக்கத்தால் தான் நமீதாவின் உடல் எடை கூடியதாக கூறப்பட்டது. இதற்கு இப்போது நமீதா தனது சமூக வலைத்தளத்தில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு:
பல ஆண்டுகள் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அப்படி நான் இருந்ததை கூட அறியாமல் இருந்தேன் என்பதுதான் கொடுமை. இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தேன். தூங்குவதற்காக அதிகமாக சாப்பிட்டேன். குறிப்பாக பீட்சா அதிகமாக சாப்பிட்டேன். இதனால் உடல் எடை கூடியது.
எனது உடல் ஒரு அமைப்பை இழந்தது. இதனால் நான் இந்த சமூகத்திற்கு தேவை இல்லாதவள் என்பதாக உணர்ந்தேன். அடிக்கடி தற்கொலை எண்ணம் வந்தது. இந்த நேரத்தில் மது பழக்தால், புகை பழக்கத்தால் எனது உடல் எடை கூடியதாக பேச ஆரம்பித்தார்கள். இந்த இரண்டு பழக்கமும் எப்போதும் என்னிடம் இருந்ததில்லை. கர்ப்பபை பிரச்சினை மற்றும் தைராய்டு பிரச்சினையால் தான் நான் எடை கூடினேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
ஆன்மிகத்தின் பக்கம் நின்றேன். கடவுள் கிருஷ்ணாவின் அருள் கிடைத்தது. யோகா செய்தேன். உடல் எடை குறைந்தது. இதை நான் சொல்வதன் நோக்கம் என்னவென்றால், நீங்கள் வெளியில் தேடுவது உங்களுக்குள்ளேயே இருக்கும் என்பதுதான்.
இவ்வாறு நமீதா பதிவிட்டுள்ளார்.