பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் |

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர் கன்னட நடிகை ராகினி திரிவேதி. 150 நாள் சிறைவாசத்திற்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு அமைதியாக இருந்த ராகினி தற்போது மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: எல்லா குடிமகன்களைப் போலவே என்னுடைய உரிமைகளும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். கடவுளின் ஆசிர்வாதத்தால், உதவியால் தீமையை வெல்வேன். என்னுடன் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என் குடும்பம், ரசிகர்கள் தான் எனது பலம். நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு ராகினி திவேதி கூறியுள்ளார்.




