'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவ ஆரம்பித்ததும் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பின் ஏழெட்டு மாதங்கள் கழித்தே மீண்டும் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் வரவில்லை.
அதை மாற்ற மாஸ்டர் படம் வந்தால் மட்டுமே முடியும் என தியேட்டர்காரர்கள் என அப்படத்தை பலமாக வரவேற்றார்கள். அதற்காக தங்களது வருமான சதவீதத்தைக் கூட குறைத்துக் கொண்டார்கள். களையிழந்த தியேட்டர்களைக் காப்பாற்ற மாஸ்டர் தான் சரியான படம் என்றார்கள்.
அப்படத்திற்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க தியேட்டர்காரர்கள் தயாராக இருந்தார்கள். படமும் ஜனவரி 13 வெளிவந்தது, எதிர்பார்த்ததைப் போலவே வசூலை அள்ளியது. தமிழ்நாட்டில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அரசு அனுமதி வழங்கியது. அதிலேயே இப்படம் நிறைவான லாபத்தை சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. ஹிந்தி, கன்னடத்தைத் தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், வெளிநாடுகள் ஆகியவற்றில் படம் லாபம் தான் என்கிறது வினியோக வட்டாரம்.
சுமார் 9 மாதங்களாக படத்தை வெளியிட முடியாத காரணத்தால் பல கோடி ரூபாயை வட்டியாகக் கட்டிய தயாரிப்பாளர் படத்தை ஓடிடி நிறுவனத்திற்கும் நல்ல விலைக்கு விற்றுவிட்டார். இன்று ஜனவரி 29 முதல் படம் ஓடிடியிலும் வெளியாகிவிட்டது.
தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் போதே 16 நாட்களிலேயே படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதற்கு தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தியேட்டர்களை மாஸ்டர் தான் வந்து காப்பாற்ற வேண்டும் என்றவர்கள் இன்று எதிர்ப்பு தெரிவித்ததில் ஆச்சரியமில்லை.
இன்னமும் பல ஊர்களில் தியேட்டர்களுக்கு வந்து மக்கள் மாஸ்டர் படத்தைப் பார்த்து வருகிறார்களாம். நாளை, நாளை மறுநாள் விடுமுறை தினம் என்பதால் இந்த வார இறுதி வரை நல்ல வசூல் கிடைத்திருக்கும். ஓடிடியில் படத்தை வெளியிட்ட காரணத்தால் அந்த வசூல் எங்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது என்று கொந்தளிக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
இனி, ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பிறகு 50 நாட்கள் கழித்துத்தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என தியேட்டர்காரர்கள் முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
சில முன்னணி நடிகர்களே தியேட்டர் வெளியீட்டிற்கு வராமல் அவர்களது படங்களை ஓடிடியில் நேரடியாக வெளியிட்டார்கள். அப்படியிருக்க தியேட்டர்காரர்களும் லாபம் சம்பாதிக்கட்டும் என மாஸ்டர் படத்தைத் தியேட்டர்களில் வெளியிட்டு லாபமும் சம்பாதித்தார்கள். தயாரிப்பாளர் அவர் கட்டிய பல கோடி வட்டி ரூபாயை ஓடிடியில் விற்றால்தான் வசூலிக்க முடியும். அவருடைய கஷ்டத்தையும் பார்க்க வேண்டாமா என தயாரிப்பாளர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.
தியேட்டர்களைக் காப்பாற்றிய மாஸ்டர் மீது இப்படி மண்ணை அள்ளி வீசுவது தியேட்டர்காரர்களுக்கு அழகல்ல என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.