டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' |
சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்கும், திறமையை காட்டுவதற்கும் விசிட்டிங் கார்டாக இருப்பது குறும்படங்கள் தான். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கருணாகரன், யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்கள் குறும்படங்களில் நடித்து அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர்கள்.
அந்த வரிசையில் இப்போது ஒரு நடிகையும் குறும்படத்தில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார். அவர் பெயர் ஸ்வேதா ஷ்ரிம்டன். பல குறும்படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்தவர், இனி ஒரு காதல் செய்வோம் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி, இயக்குகிறார். புதுமுகம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமாகிறார். கோபிநாத் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரேவா எனும் பெண் இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஹரிஹரன் கூறியதாவது: 90களில் பிறந்தவர்களின் கல்லூரி வாழ்க்கையையும், நட்பையும், காதல் மற்றும் பிரிவையும் பிரதிபலுக்கும் வண்ணம் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காதல் மற்றும் காமெடியுடன் கலகலப்பாக நகரும் திரைக்கதை. 90 காலகட்டத்தை திரைக்கு கொண்டுவர கலை இயக்குனர் நிறைய உழைத்திருக்கிறார். சென்னை, புதுச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது என்றார்.