துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஹீரோ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வந்த டாக்டர், அயலான் என்ற இரண்டு படங்களில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். இதில் டாக்டர் படத்தை நெல்சனும், அயலான் படத்தை ரவிக்குமாரும் இயக்கினர். இருவாரங்களுக்கு முன் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. நெல்சன் அடுத்து விஜய் படத்தை இயக்க இருப்பதால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியை தீவிரமாக்கி உள்ளார்.
மற்றொருபுறம் ஏலியனை மையமாக வைத்து உருவாகும் அயலான் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது. இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய பல மாதங்கள் ஆகும். அதனால் இந்த ஆண்டு இறுதியில் அப்படம் திரைக்கு வர உள்ளது.
இதனிடையே டாக்டர் படத்தின் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17-ம் தேதி வெளியாக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.