என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசிகண்ணா, மஞ்சிமா மோகன், சம்யுக்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதையடுத்து தற்போது அந்த டீசர் குறித்த சில சர்ச்சைகளும் சோசியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அதாவது, துக்ளக் தர்பார் படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் பார்த்திபனின் பெயர் ராசிமான் என்றும், அவர் மக்கள் முற்போக்கு முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்துவதாகவும் அந்த டீசரில் ஒரு போஸ்டர் இடம்பெற்றது. அதோடு, புலி உள்ள வரை உங்கள் புகழ் இருக்கும் என்ற வாசகமும் அதில் இடம்பெற்றிருந்தது. இது தான் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் பரபரப்பு விவாதமாகியிருக்கிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக் குமரன் வெளியிட்ட செய்தி : துக்ளக் தர்பார் திரைப்பட முன்னோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானுக்கு எதிரானது போல சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்குகிறது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டபொழுது "தெரியாமல் நடந்து விட்டது அந்தமாதிரி காட்சிகளை சிஜி பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கி விடுகிறேன் என உறுதி அளித்துள்ளார்.
இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குனர், இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக்காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுதும் ஒரு காட்சி கூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம். இழவுவீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள்.. இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகுவிரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.