பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் வெளியாகி 2 வருடம் ஆகும் நிலையில், அடுத்தபடியாக அவர் நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ல் திரைக்கு வருகிறது. இதனால் இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். அதேசமயம் இப்படம் வெளியீடு தொடர்பாக சிக்கலும் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனால் படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்பமான நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் ஈஸ்வரன் படத்திற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க தொடங்கிய மாநாடு படத்தின் படப்பிடிப்பு சில பல பிரச்னைகளை கடந்து மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் சில போஸ்டர்கள் ரசிகர்களை ஈர்த்த நிலையில் இப்போது பொங்கல் அன்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருக்கிறது.