என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

ஆறு ராஜா தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் 'பாப்பிலோன்'. கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, பூ ராமு, வினோத், அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும், அதற்கு காரணம், தீர்வு என்ன என்பதை பேசும் விதமாக, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாகி உள்ளது.
இதன் பாடல் வெளியீட்டில் பேசிய நடிகை கோமல் சர்மா, ''ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு வலிமையான பெண்ணின் கையில் தான் இருக்கிறது. ஒரு வலிமையான பெண்ணால்தான் ஒரு குழந்தையை வளர்த்து, வலிமையான குடிமகனாக உருவாக்க முடியும். ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழும் பட்சத்தில், அதை மனதிற்குள்ளேயே பூட்டாமல் தனது பெற்றோரிடம் தைரியமாக சொல்ல வேண்டும். அதன்பிறகு வரும் எந்த ஒரு கடினமான சூழலையும் தாண்டி அவர்களால் வெளிவர முடியும். அப்படி அந்த விஷயங்கள் வெளியில் வரும்போது தான், இதுபோன்று கொடுமையை செய்பவர்கள் தங்கள் வீட்டு பெண்களைப்போல, மற்றவர்களையும் நினைப்பதற்கு யோசிக்கத் தொடங்குவார்கள். பெண்களை எப்படி வலிமையாக வளர்க்கிறோமோ, அதேபோல பையன்களையும், பெண்களை எப்படி மதிக்க வேண்டும், மரியாதையுடன் நடத்த வேண்டும் எனக்கூறி வளர்க்க வேண்டும் . அப்படி செய்யும்போது தான், இந்த நிலை விரைவில் மாறும்” என்றார்.