ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
அமரர் கல்கி எழுதிய மிகப்பெரிய வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்', புத்தக விரும்பிகளின் மனதை கவர்ந்த நாவல். இதை படமாக்கி வரும் இயக்குனர் மணிரத்னம், இதை தனது கனவு படமாகவே இயக்குகிறார். பாலிவுட்டின் ஐஸ்வர்யா ராய் உட்பட, தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்கின்றனர்.. ஏற்கனவே சில நாட்கள் நடந்த படப்பிடிப்பு கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரகுமான், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுபவத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ள ரகுமான், “பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொண்டுள்ளேன்.. முதல்நாள் முதல் காட்சியே, ஐஸ்வர்யா ராயுடன் நடித்ததில் மிகப்பெரிய சந்தோஷத்தில் இருக்கிறேன். படக்குழுவினர் உத்தரவு காரணமாக புகைப்படங்களை பகிர முடியவில்லை நண்பர்களே” என குறிப்பிட்டுளார். நடிகர் ரகுமான் மணிரத்னம் டைரக்சனில் நடிப்பதும், ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடிப்பதும் இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தகது. .