ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு கேரளாவில் இம்மாதம் 5ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. 50 சதவீத இருக்கைகள், இரவு நேரக் காட்சிகள் கிடையாது மற்றும் சில சலுகைகளுக்கு கோரிக்கை ஆகியவற்றை முன் வைத்து தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என மலையாளத் திரையுலகத்தினர் அறிவித்தார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால், விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை கேரளாவில் திரையிட முடியாத சூழல் உருவாகியது. மலையாளத் திரையுலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிலர் வேண்டுமென்றே 'மாஸ்டர்' படத்தை வெளியிடுவதைத் தடுக்கவே இப்படி ஒரு போராட்டத்தை அறிவித்ததாகவும் விஜய் ரசிகர்களிடம் தகவல் பரவியது.
இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த மலையாளத் திரையுலகினர் அவர்களது கோரிக்கைகளுக்கு முதல்வர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தியேட்டர்களைத் திறக்க முடிவெடுத்துள்ளனர். எனவே, தியேட்டர்களைத் திறப்பது பற்றிய முடிவை கேரளா பிலிம் சேம்பர் விரைவில் அறிவிக்க உள்ளது. 'மாஸ்டர்' படம் வெளியாகும் ஜனவரி 13 முதல் தியேட்டர்கள் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது.