ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
பழங்கால பொருட்களை பாதுகாக்க மியூசியம் இருப்பது போன்று திரைப்படம் சார்ந்த பழமையான பொருட்கள், பழைய படங்களை பாதுகாக்க மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தேசிய திரைப்பட ஆவண காப்பகம் உள்ளது. திரைப்படம் குறித்து படிக்கும் மாணவர்களுக்கு இது அரிய பொக்கிஷம். இந்த ஆவண காப்பகம் ஆண்டுதோறும் வெளியிடும் காலெண்டர் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தலைப்பில் இந்த காலெண்டரை வெளியிடும். அந்த வரிசையில் 2021ம் ஆண்டு காலெண்டரை சிறந்த நடிப்பு கலைஞர்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இந்த காலெண்டரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகர் என்ற தலைப்பின் கீழ் அவரது படம் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்த லட்சுமியும், தாசி என்ற தெலுங்கு படத்தில் நடித்த அர்ச்சனாவும் சிறந்த நடிகைகளாக குறிப்பிடப்பட்டு அவர்கள் படம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இவர்கள் தவிர மலையாள நடிகர் பி.ஜே.ஆண்டனி, பரத்கோபி, நடிகை மோனிஷா உன்னி, இந்தி நடிகைகள் ரெஹானா சுல்தானா, ஸ்மிதா பாட்டீல், பெங்காலி நடிகர்கள் மாதாபாய் முகர்ஜி, உத்தம குமார், கன்னட நடிகர்கள் எம்.வி.வாசுதேவ ராவ், நந்தினி பக்தவச்சலா ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளது.