Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி, லட்சுமி ராமகிருஷ்ணன் எதிர்ப்பு

05 ஜன, 2021 - 15:26 IST
எழுத்தின் அளவு:
lakshmi-ramakrishnan-opposes-that-government-gave-permission-for-100-percent-seats-in-theatres

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதற்கு திரையுலகினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

ஒரு சில திரையுலகினரும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர் கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள். நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் டாக்டர் ஒருவரின் முகப்புத்தகப் பதிவை டுவிட்டரில் பகிர்ந்து அவருடைய சொந்த கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்.


“டாக்டர்களுக்கு திரையுலகம் என்ன நியாயத்தைக் கொடுக்கப் போகிறது ?, பணத்திற்காக வாழ்க்கையை வர்த்தகமாக்குவது ?, பொது போக்குவரத்து இயங்குகிறது ? ஆனால், மக்கள் கவலைப்படுவதில்லை என்பது தர்க்கமான ஒரு வாதம். தமிழ்நாடு நன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், தியேட்டர்களில் 50 சதவீத அனுமதி மட்டும் வழங்கலாமே, மக்களின் உடல்நலம் மிகவும் முக்கியமானது.


திரையுலகம் வாழ வேண்டும் என்று கருதினால் பெரிய ஹீரோக்கள் அவர்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளட்டும். தயாரிப்பாளர்களுக்கு சுமையாக இருப்பதை நிறுத்துங்கள். அந்த வகையில் தொழிலை நடத்த முடியும். தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கும் வாழ்வாதாரத்தைக் கொடுக்க முடியும். 50 சதவீத அனுமதியிலேயே தேவையான வருவாயைப் பெற இயலும்.


தியேட்டர் உரிமையாளர்கள் கடினமான ஒரு நேரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், ஏற்றுக் கொள்கிறேன். அதே போல வேறு பல தொழில்களும் உள்ளன. மக்களின் உடல்நலத்திற்கு எந்த ஊறும் இல்லாமல் வேறு மாற்று முறைகளை அவர்கள் உருவாக்க வேண்டும். ஒரு தகவல் அது அனுப்பும் முறையைப் பொறுத்தே இருக்கிறது, அது எல்லாம் இயல்பாக இருப்பது போலவே சொல்கிறார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கடவுளும் நானும்: ராஜீவ் மேனன், மதன் கார்க்கி இணைந்து உருவாக்கும் தமிழிசை பாடல்கள்கடவுளும் நானும்: ராஜீவ் மேனன், மதன் ... தியேட்டர்களுக்கு 100 சதவீத அனுமதி : அரசு பின் வாங்குமா ? தியேட்டர்களுக்கு 100 சதவீத அனுமதி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sura -  ( Posted via: Dinamalar Android App )
06 ஜன, 2021 - 15:14 Report Abuse
sura well said madam
Rate this:
sathish -  ( Posted via: Dinamalar Android App )
06 ஜன, 2021 - 11:12 Report Abuse
sathish உன் வேலை பாரு தியேட்டர் ல வேலை செய்யும் ஆளுங்கள் ல நீ kappatha போறிய 10 மாசம் வேலை இல்லாமல் இருந்து இவங்க கஷ்டம் உனக்கு எங்கே தெரிய போது
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
05 ஜன, 2021 - 17:52 Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  சூப்பர் மேடம்.. . உங்கள் "அம்மணி" மற்றும் 'ஆரோகணம்" படங்கள் பார்த்து உங்களின் சமூக அக்கறை கண்டு வியந்தேன்.. 50% என்பதே அதிகம்.. இந்த நடிகர்கள் தங்கள் சொந்த லாபத்திற்காக மக்கள் வாழ்க்கையுடன் விளையாடுகின்றனர். தங்கள் உயிரை கொடுத்து உழைக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்க்கும் என்ன மரியாதை? மீண்டும் கொரோன எண்ணிக்கை அதிகரித்தால் இந்த சினிமா வியாபாரிகள் பொறுப்பேற்பார்களா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in