இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. அந்த அனுமதிக்கு திரையுலகினர் சார்பில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து கருத்துக்களைப் பகிர்ந்தார்கள்.
நடிகர் அரவிந்த்சாமி, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து டுவீட் செய்துள்ளனர். கொரானோ தொற்று காலத்தில் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர்கள் பலரும் 100 சதவீத இருக்கை அனுமதி என்பது குறித்து எச்சரிக்கை தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் பொங்கலுக்கு வர உள்ளன. பண்டிகைகக் காலம் என்பதால் மக்கள் நெருக்கம் அதிகமாகவும் இருக்கும். முன்னணி நடிகர்களின் படங்கள் என்பதால் அவற்றைப் பார்க்க அரங்கு நிறைந்த அளவிற்கு மக்கள் திரண்டால் அது கொரானோ பரவலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
ஒரு பெரிய படம் வெளிவந்தால் அதிக பட்சமாக இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் வருகிறார்கள். 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கினால் இரண்டு வாரங்களில் ஆகும் வசூல், 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கும் போது மேலும் இரண்டு வாரங்களில் வசூலித்துவிடப் போகிறது.
'மாஸ்டர்' படத்திற்காக விஜய் 80 கோடி சம்பளம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். அவர் தன்னுடைய சம்பளத்தை பாதியாகக் குறைத்துக் கொண்டு 40 கோடியை திருப்பிக் கொடுத்துவிட்டால் அந்த இரண்டு வார வசூல் பிரச்சினையும் இல்லை. அதற்காக மக்கள் தாங்களாகவே தேடிப் போய் ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டுமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
மேலும், தற்போது உருமாறிய கொரானோ என்ற புதிய ஆபத்தும் வந்திருக்கிறது. நாம் இன்னும் தொற்று பரவல் என்ற நிலையில் இருந்து முற்றிலுமாக விலகவில்லை. எனவே, தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்பது ஆபத்தானது என்ற கருத்து தற்போது அதிகமாகப் பரவி வருகிறது.
மேலும், தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி பற்றிய சிக்கலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.