பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மோகன்லாலின் மகன் பிரணவ், தற்போது இருபத்தியோன்னாம் நூற்றாண்டு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் நடிகர் திலீப், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்து படக்குழுவினரை உற்சாகப்படுத்தி சென்றார். அதற்கு காரணம் இந்த படத்தை இயக்கும் அருண்கோபி, திலீப்பை வைத்து ராம்லீலா என்கிற 1௦௦ கோடி வசூல் படத்தை கொடுத்தவர் என்பதுதான்.
அதேசமயம் இந்த படத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத மம்முட்டி, கிறிஸ்துமஸ் தினமான நேற்று இந்த படத்தின் டப்பிங் நடைபெறும் ஸ்டுடியோவிற்கு திடீர் விசிட் அடித்தார். பிரணவ் மோகன்லால் மற்றும் படக்குழுவினர் அனைவருடனும் இணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார் மம்முட்டி.
பிரணவ் மோகன்லாலும், மம்முட்டியும் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய வீடியோ, மத நல்லிணக்கத்திற்கு சான்றாக சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.