அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஜெயம் ரவி, ராசி கண்ணா நடித்துள்ள அடங்கமறு படம், வருகிற வெள்ளிக்கிழமை வெளிவருகிறது. இதனை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். ஜெயம் ரவியின் ஈடுபாடு, பங்களிப்பு குறித்து சுஜாதா விஜயகுமார் கூறியிருப்பதாவது:
வித்தியாசமான, அதேநேரத்தில் சிறப்பான ஒரு படத்தை கொடுக்க விரும்பினேன். தற்போது அடங்க மறு படத்தின் அவுட்புட் பார்க்கும்போது என் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவும், என் கனவை நனவாக்கி இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு பார்வையாளராக இந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாராட்டுக்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் தான் போய் சேரும். படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ஜெயம் ரவி தயாரிப்பாளர்களுக்கு ஒரு "பாதுகாப்பான பந்தம்". அவரது திறமையான நடிப்பு மற்றும் கதைதேர்வுகளை வைத்து மட்டும் சொல்லவில்லை, அவர் தன் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் முக்கியமான காரணம். ஒரு தயாரிப்பாளர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் எப்போதும் தயாரிப்பாளர்களை முதல் இடத்திலும், இயக்குனர்களை அடுத்த இடத்திலும் வைத்து மதிக்கிறார். அடங்க மறு அவரது கேரியரில் மிகவும் தனித்துவமான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். என்றார்.