பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
நினைவில் நிற்கும்படியான, உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கியவர் சேரன். கடந்த நான்கு வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த சேரன், தற்போது, திருமணம் என்கிற படத்தை இயக்குகிறார். தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்க, கேரளாவை சேர்ந்த கவிதா சுரேஷ் நாயகி ஆகி உள்ளார்.
இவருக்கு முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க குக்கூ புகழ் மாளவிகா நாயகரைத்தான் தேர்வுசெய்தாராம். ஆனால் அவரது குழந்தைத்தனம் மாறாத முகம் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தாது என தீர்மானித்தபோது ஏதேச்சையாக கண்ணில் பட்டவர் தான் இந்த கவிதா சுரேஷ்.
சேரனின் அலுவலகம் உள்ள அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் டான்ஸ் மாஸ்டர் ஒருவரை பார்க்க வந்த கவிதா சுரேஷ், தவறுதலாக சேரன் வீட்டு கதவை தட்டப்போக, கதவை திறந்த அந்த சில கணங்களில் கவிதாவை பார்த்ததுமே அவர்தான் கதாநாயகி என தீர்மானித்து விட்டாராம் சேரன்.