தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” |
கலர்ஸ் தமிழ் சேனலின் புதிய தொடர் வள்ளி திருமணம். இதில் நட்சத்திரா, நளினி, நாஞ்சில் விஜயன், ஷியாம் உள்பட பலர் நடிக்கிறார்கள். சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் வள்ளி திருமணம் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தேனியை மையமாக கொண்ட கதை களம். கிராமத்து தெனாவெட்டு பெண் வள்ளி. கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அடாவடி வசூல் செய்வதுதான் அவரது தொழில். ஆனாலும் அன்புக்கு கட்டுப்பட்டவள். இவ்வளவு அடாவடியாக பெண்ணுக்கு எப்படி திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்று கவலைப்படுகிறார் தாய். இந்த நேரத்தில் வெளிநாட்டில் தொழில் செய்து வரும் கார்த்திக் தொழில் விஷயமாக தேனிக்கு வருகிறார். வந்த இடத்தில் வள்ளியை சந்தித்து காதல் கொள்கிறார்.
காதலித்த பிறகுதான் அவர் அடாவடியான பெண் என்று தெரிகிறது. இதனால் அவர் தன் குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று கருதி அவரிடமிருந்து ஒதுங்குகிறார். தனது அடாவடித்தனமான குணம்தான் தன் காதலுக்கு தடையாக இருக்கிறது என்று கருதும் வள்ளி, தன் குணத்தை மாற்றிக் கொண்டு காதலுக்காக அடக்க ஒடுக்கமான பெண்ணாக மாறுகிறார். அவர்கள் காதல் கைகூடியதா? வள்ளி ஏன் அடாவடி பெண்ணாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் தொடரின் கதை.