குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ரசனையை இப்போது தான் கலர்ஸ் டிவி கரெக்டாக கண்டுபிடித்துள்ளது. அதற்கேற்ப இதுவரை பாலோ செய்து வந்த பார்முலாக்காலை மாற்றி, நிகழ்ச்சிகளிலும், சீரியலிலும் புதிய வடிவத்தை காட்டி வருகிறது. சில சீரியல்களை புது கதைக்களத்துடன் இறக்கி வருகிறது. அந்த வகையில் வள்ளி திருமணம் என்ற புது சீரியலின் ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த தொடரில் பிரபல சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா நடிக்கிறார். பார்ப்பதற்கு டஸ்கியா இருக்கும் நக்ஷத்திரா முன்னதாக யாரடி நீ மோகினி தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார். அந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்ததையடுத்து நக்ஷத்திரா அடுத்த என்ன சீரியல் நடிக்க போகிறார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் அவர் கலர்ஸ் டிவியில் வள்ளித் திருமணம் என்ற சீரியலில் கமிட்டாகியுள்ளார். வெண்ணிலா கதாபாத்திரத்தில் சாந்தமான குணம் கொண்ட பெண்ணாக வந்த நக்ஷத்திரா கலர்ஸ் டிவியின் வள்ளி திருமணம் தொடரில் துடுக்கான, கெத்தான பெண்ணாக நடிக்கிறார். இந்த சீரியலின் இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. வள்ளித்திருமணம் தொடர் வருகிற ஜனவரி 3 முதல் இரவு 8 மணிக்கு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.