'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தங்க மீன்கள் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் பரியேறும் பெருமாள். திருநெல்வேலி மண்வாசனைக் கதையில் உருவான இந்த படத்தில் கதிர், கயல் ஆனந்தி யோகிபாபு, மாரிமுத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்திற்கு தமிழகமெங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் முதல் வாரத்திற்கு பிறகு இரண்டாவது வாரத்தில் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், அக்டோபர் 12-ந்தேதியான நாளை முதல் இந்த பரியேறும் பெருமாள் படம் கர்நாடகாவில் வெளியாகிறது. இந்த தகவலை அப்படக்குழு வினர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.