அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நாடோடிகள் படத்திற்கு பிறகு சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சுந்தர பாண்டியன் தான். அவருக்கு மட்டுமல்ல அந்தபடத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனையும் நன்கு வெளிச்சம் போட்டு காட்டியது.. ஆனால் அதன் பின் எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்சனில் வெளியான இது கதிர்வேலன் காதல், சத்ரியன் இரண்டும் பெரிய அளவில் போகவில்லை.
இந்தநிலையில் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் தற்போது மீண்டும் 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்கிற படத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கான டைட்டில் போஸ்டர் சமீபத்தில் சூர்யாவால் வெளியிடப்பட்டது. தற்போது இந்தப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஜுங்கா ரிலீசை தொடார்ந்து தமிழ், மலையாளம் எதிலும் படவாய்ப்புகள் இல்லாத மடோனா, கன்னடத்தில் கோட்டிகோபாலு-2 என்கிற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.