தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இதில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நதியாவில் நடிக்க முடியாத கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கூறியதாவது:
படத்தில் வரும் ஒரு முக்கியமான ஷாட் அது. படத்தின் போக்கையே தீர்மானிக்கிற ஷாட். அது சொதப்பினால் படமும் சொதப்பிவிட வாய்ப்பிருக்கிறது. அதனால் அதனை மிகவும் கவனமாக எடுக்க முடிவு செய்தேன். அந்த ஷாட்டில் ரம்யா கிருஷ்ணனுடன் இன்னும் சில துணை நடிகர்களும் நடிக்க வேண்டும். எல்லோரையும் அழைத்து அந்த ஷாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அது எப்படி வரவேண்டும் என்பதையும் சொன்னேன். அதன்பிறகு அந்த ஷாட்டை எடுத்தேன்.
ஒரு முறை இருமுறை அல்ல 80 முறை அது ரீடேக் போனது. அந்த ஒரு ஷாட்டை மட்டும் 3 நாட்கள் படமாக்கினோம். யாராவது ஒருவர் சொதப்பி விடுவார்கள் மீண்டும் டேக் போவோம். 80 ஷாட்களிலும் சலிக்காமல், முகம் சுழிக்காமல் நடித்துக் கொடுத்தார் ரம்யா கிருஷ்ணன். படம் பார்க்கும்போது அந்த ஷாட் எது என்பதை எல்லோராலும் உணர முடியும்.
ரம்யா கிருஷ்ணன் நடித்த கேரக்டரில் நதியா தான் முதலில் நடித்தார். அவரால் இந்த டேக்கை ஓகே பண்ணவே முடியவில்லை. என்னால் முடியவில்லை என்று நாம் நண்பர்களாவே இருப்போம் என்ற விலகி கொண்டார். அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் உள்ளே வந்து நடித்துக் கொடுத்தார். என்றார்.