இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விக்ரம் பிரபு, ஹன்சிகா நடித்துள்ள படம் துப்பாக்கி முனை. இவர்களுடன் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, வின்சென்ட் அசோகன், கல்யாணி நட்ராஜ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எல்.வி.முத்துகணேஷ் இசை அமைக்கிறார். வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
இதன் பின்னணி இசை பணிகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியா நகரில் நடந்து வருகிறது. இதற்காக இசை அமைப்பாளர் எல்.வி.கணேஷ் உள்ளிட்ட இசை குழுவினர் அங்கு சென்றுள்ளனர். இங்குதான் கபாலி, வேலையில்லா பட்டதாரி 2 படங்களுக்கு பின்னணி இசை அமைகக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. படம் பற்றி விக்ரம் பிரபு கூறியதாவது:
சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது. ஆனால் நான் வாளாக பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது, தேசத்தந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர சமுதாயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கிறது ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள். அவை எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது கதையின் நாயகன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பிர்லா போஸின் தனிப்பட்ட கருத்து.
தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போலிஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன? பெற்றது என்ன? என்பதே கதை சுருக்கம். போலீஸ் அதிகாரி பிர்லா போஸ் கதாபத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் நடித்திருக்கிறேன்.