ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் 'விஸ்வரூபம் 2' உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் மதுரை மற்றும் தென் ஆற்காடு ஏரியாக்களில் வெளியாகவில்லை. மதுரை விநியோகஸ்தருக்கு தர வேண்டிய 1.5 கோடி பஞ்சாயத்து காரணமாக மதுரையில் வெளியாகவில்லை.
அதேபோன்றதொரு பஞ்சாயத்து தென் ஆற்காடு ஏரியா விநியோகஸ்தர் ஒருவருடன் இருந்ததால் அங்கும் வெளியாகவில்லை. இரண்டு ஏரியாக்களிலும் விஸ்வரூபம்- 2 படம் வெளியாகியிருந்தால் சுமார் 5 கோடி வருவாய் கிடைத்திருக்கும். அதில் கொடுக்க வேண்டிய 2 கோடி போக மீதி 3 கோடி லாபம் ஈட்டியிருக்கலாம். ஆஸ்கார் ரவிசந்திரன் உடன்பாட்டுக்கு ஒத்துவராததினால் பிரச்சனை முடியாமல்போய், படம் வெளியாகாமல் போய்விட்டது.
இரண்டு ஏரியாக்களில் படம் வெளியாகவில்லை என்பதை அறிந்த கமல் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆஸ்கார் ரவியோ, கமலின் கருத்தை கண்டு கொள்ளவே இல்லை. அவருக்கு சேர வேண்டிய மொத்தப் பணத்தையும் நயா பைசா பாக்கி வைக்காமல் கொடுத்துவிட்டேன். அதற்கு மேல் அவர் என்னுடைய வியாபாரத்தில் தலையிட வேண்டாம் என்று கமலுக்கு நெருக்கமானவர்கள் மூலம் சொல்லி அனுப்பிவிட்டாராம். அதனால் வேறுவழியில்லாமல் அமைதியாகிவிட்டார் கமல்.