என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாள சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே இதுவரை இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஒரே நடிகர் நடித்து அடுத்தடுத்த மாதங்களில் வெளியான படங்கள் 200 கோடி வசூலித்துள்ளன. அப்படி ஒரு சாதனையை மோகன்லால் புரிந்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் அவர் நடித்து வெளியான 'எல் 2 எம்புரான்', படமும் மே மாதத்தில் அவர் நடித்து வெளியான 'தொடரும்' படமும் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது.
பான் இந்தியா நடிகர்கள் என தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் தெலுங்கு, ஹிந்தி நடிகர்கள் கூட இப்படி ஒரு சாதனையை இதுவரை புரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த வெற்றியை மோகன்லால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 'எல் 2 எம்புரான்' படத்தில் அவரது கதாபாத்திரமான ஸ்டீபன், 'தொடரும்' படத்தில் அவரது கதாபாத்திரமான 'பென்ஸ்' உருவங்களை அந்த கேக்கில் வைத்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
மலையாள சினிமாவில் முதல் 100 கோடி திரைப்படம் 'புலிமுருகன்', வெளிநாடுகளில் முதல் 100 கோடி வசூல் பெற்ற மலையாளத் திரைப்படம் 'எம்புரான்', கேரளாவில் மட்டும் முதல் 100 கோடி வசூல் பெற்ற மலையாளத் திரைப்படம் 'தொடரும்' என சில முக்கிய சாதனைகளின் சொந்தக்காரர் மோகன்லால்.