ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
சந்தானம் நடித்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ள கோவிந்தா பாடலில் முழு வரிகள் இவை. இந்த பாடலை கெழுத்தி என்பவர் எழுதியுள்ளார். ஆப்ரோ என்பவர் இசையமைத்துள்ளார். திருப்பதி பெருமாள் குறித்து காலங்காலமாக, உணர்வுப்பூர்வமாக பாடப்படும் 'சீனிவாசா கோவிந்தா..' என்ற பாடல் மெட்டில் இந்த பாடல் அமைந்துள்ளது.
இப்படத்தில் ஒரு சினிமா விமர்சகர்கராக சந்தானம் நடிக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரிவியூ எழுத சொல்ல முயல இந்த பாடல் வருகிறது. இந்த சிச்சுவேஷனுக்கு கோவிந்தா பாடலை வம்பு இழுப்பது ஏன் என்பதே கோடிக்கணக்கான பெருமாள் பக்தர்களின் கோபம். இந்த பாடலை படத்தில் இருந்து நீக்காவிட்டால் தமிழக மக்கள் பிரதிநிதிகள் திருப்பதிக்குள் நுழைய முடியாது என்று ஆந்திர மாநில துணைமுதல்வர் பவன் கல்யாணனின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்து, இந்த பாடல் குறித்து திருப்பதி போலீசிலும் புகார் கொடுத்துள்ளனர்.
அதேபோல் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினரும், பா.ஜ மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் என்பவரும் இந்த பாடலை நீக்க வேண்டும். ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு, சந்தானம், படத்தை த யாரிக்கும் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். படத்தை தயாரிப்பது நடிகர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ சந்தான படத்தில் 'சீனிவாசா கோவிந்தா...' என்ற பக்தி பாடலின் மெட்டில், வம்பு இழுத்து எழுதப்பட்ட முழு வரிகள்:
அண்ணன் போஸ்டுக்கு
அகிலமும் வெயிட்டிங்
கமெண்ட் செக்ஷன்ல
பேன்ஸ் எல்லாம் பைட்டிங்
ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
பக்தவத்ஸலா கோவிந்தா
மாதவராப்ரியா கோவிந்தா
சுகுரோம் ஸ்வைப் பண்றான்
என் லைபீ ரைட்டுல
படத்த குக் பண்றேன்
ஆயில் வாங்கி குவைட்டுல
ரிவியூவா ஆரம்பிச்சேன்
அம்மாவோட வயித்துல
வீடியோவா போடுவேன் டா
கரெக்டான டயத்துல
பார்க்கிங் காசு கோவிந்தா
பாப்கார்ன் டாக்ஸ் கோவிந்தா
ஹீரோயின் நடிப்பு கோவிந்தா
பேன்ஸோட நிலைமை கோவிந்தா
சோ கமலா மிஸ் கிளாஸ் நான்
விமர்சிச்சேன் எய்துல
ஓடிடி சீரீஸ் எல்லாம்
பாப்பேன் ஒரே நைட்டுல
பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ
போட்டோ எடுப்பேன் டைட்டில
போட்டேன் வலைதளத்துல
எறங்கனேன் களத்துல
பின்சர் ஓட ப்ரீக்வெல்
நோலன் ஓட சீக்வெல்
ஸ்பைக் லீக்கு முன்னாடி
எல்லாருமே ஈக்வல்
அம்மா மேல சத்தியம்
சினிமா மேல பைத்தியம்
ஈ அடிச்சன் காப்பி எல்லாம்
ரிவ்யூ தான் டா வைத்தியம்
பார்க்கிங் காசு கோவிந்தா
கஷ்டப்பட்ட காசு கோவிந்தா
பாப்கார்ன் ஸ்நாக்ஸ் கோவிந்தா
இஷ்டப்பட்டு சாப்பிட்டா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வெங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வெங்கடரமணா கோவிந்தா
மாஞ்செஸ்டர் என் மச்சானோட சிஸ்டர்
எனக்கு ஓன் சிஸ்டர்
நான் ஒன் ஸ்டார் குடுத்தாலே
ப்ளாக்பஸ்டர்
ஜிடிஏ 6 ல வரப்போற
கேரக்டரா வே நா மாறிட்டேன்
அண்ணன் அல்கெமிஸ்ட் கோல்டாகுவாரு கல்ல
டாலரா போட்டுப்பாரு டிராகன் ஓட பல்ல
பத்து பட்டாசு வெடி வயரு பத்திக்கும்
நல்லார்ந்த சில பேர் வயிறு பத்திக்கும்
வயிரெறிஞ்ச ஆரோக்கியா தயிரு தொட்டுக்கோ
நான் தயிரு இல்ல ஆனியன் கண்ணு வேர்த்துக்கோம்
வேற கூட கார்ரா மாத்துற சித்தரும் எங்க அண்ணேன்
புத்தரும் கூட அண்ணன் ஓட பக்தர் தானடா
ராஜ ராஜ சோழன் சொந்தக்காரன் எங்க அண்ணேன்
நெப்போலியன் அண்ணனுக்கு சொந்தக்காரன் டா
பப்பராசி பிளாஷ் லைட்டா கண்ணு கூசும்
கும்ப ராசிக்கு இது பழக்க தோஷம்
கால மிதிச்சா தொட்டு கும்பிடுற பழக்கம்
வேணும் டே மிதிச்ச தூக்கிப் போட்டுப் பொளப்போம்
கிச்ஸா இருப்பான் கன்சிஸ்டா
எங்க கிட்டவே பாலிடிக்ஸா
எங்களை லைட்டா நோண்டிட்டா
எறங்கி அடிப்போம் பட்டிஸ்டா
கிச்ஸா இருப்பான் கன்சிஸ்டா
எங்க கிட்டவே பாலிடிக்ஸா
எங்களை லைட்டா நோண்டிட்டா
எறங்கி அடிப்போம் பட்டிஸ்டா
எங்களை லைட்டா நோண்டிட்டா
எறங்கி அடிப்போம் பட்டிஸ்டா
- இப்படி முடிகிறது அந்த வம்பு பாடல்.