ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‛‛டிடி நெக்ஸ்ட் லெவல்'. நடிகர் ஆர்யா இதை தயாரித்துள்ளார். வரும் மே 16ல் ரிலீஸாகிறது. இப்படத்திலிருந்து 'Kissa 47' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலின் வரிகளில் ‛‛பார்க்கிங் காசுக்கு கோவிந்தா, பாப்கார்ன் டாக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்புக்கு கோவிந்தா...'' என ‛ஸ்ரீனிவாச கோவிந்தா' எனும் பெருமாள் பாடலை கிண்டல் செய்வது போன்று இருப்பதாக கூறி எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மத வழிபாடு, சடங்குகளை தவறாக சித்தரித்து எடுத்த பாடலுக்காக சந்தானம், ஆர்யா மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என சேலத்தில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருப்பதியிலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் ஜன சேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர். மேலும் நேற்று திருமலைக்கு குடும்பத்துடன் சென்ற தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், ‛‛இந்து மதம் மற்றும் கடவுளை அவமதிக்கும் சர்ச்சைக்குரிய இந்தப் பாடலை நீக்க வேண்டும்" என பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான பானுபிரகாஷ் ரெட்டி, ‛‛டிடி நெக்ஸ்ட் லெவல்'' படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‛‛டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கோவிந்தா பெயரில் வெளியிடப்பட்ட பாடல் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு எங்கள் வக்கீல் மூலம் சந்தானம் மற்றும் நிஹாரிகா தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தமிழக அரசு ஒரு நாத்திக அரசு. இந்த பாடலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் 15 நாட்களுக்குள் ஸ்ரீவாரி பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்'' என தெரிவித்துள்ளார்.