விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்து வருகிறது. சுமார் ஒரு வார காலம் அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ரஜினிகாந்த் தங்கியுள்ளார்.
கோழிக்கோடு அருகிலுள்ள ஒரு வீட்டிலும் சுற்று வட்டாரங்களிலும் படப்பிடிப்பு சுமார் ஒரு வார காலத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஹோட்டலிலிருந்து ரஜினிகாந்த் படப்பிடிப்புக்குச் செல்லும் போதும் வரும் போதும், படப்பிடிப்பு தளத்திலும் அவரைப் பார்க்க அங்குள்ள ரசிகர்கள் கூடுகின்றனர். தனது காரின் மேற்கூரையைத் திறந்து அவர்களை நோக்கி ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் கையசைக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.