மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? | இந்தியிலும் கலக்கும் ரெஜினா | கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம் | சூர்யா 46வது படத்தில் விஜய் தேவரகொண்டா? | நாங்கள் ஒரு நல்ல படம் தயாரித்துள்ளோம் : சூரஜ் பஞ்சோலி | '3 பிஎச்கே' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | தனுஷுக்கு கதை கூறிய டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்! | 'பிரேக் அவுட்' யோகலட்சுமியின் வெப் சீரிஸ் 22ல் வெளியாகிறது | இளையராஜா இசையில் பாடிய முதல் பாடல்: பாடகி நித்யஸ்ரீ மகிழ்ச்சி |
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடிக்கிறார்கள். பொதுவாக வாரிசுகள் படம் இயக்கும்போது அந்த படத்தில் அவரின் அப்பா அல்லது அவரின் உறவினர்கள் அந்த படத்தில் கவுரவ வேடங்களில் நடிப்பது உண்டு.
ஆனால், ஜனநாயகன் படத்துக்கு பின் வேறு படங்களில் நடிக்கமாட்டேன் என்று விஜய் சொல்லிவிட்டார். மகன் பட விஷயத்திலும் தலையிடுவது இல்லை. ஆகவே அவர் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இப்போது விஜய் எந்த படத்திலும் பாடமாட்டேன் என சொல்லவில்லை. அதனால், மகன் படத்தில் பாடுவாரா? அதேபோல், ஜேசன் பாட்டியான ஷோபாவும் விஜய் நடித்த பல படங்களில் பாடியிருக்கிறார். அவர் பேரன் படத்தில் பாடுவாரா? ஜேசன் தாத்தாவான, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பல படங்களில் நடித்து வருகிறார். அவர் பேரன் படத்தில் நடிப்பாரா? அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாருமின்றி, தனது படத்தை ஜேசன் இயக்குவாரா? அவரே ஒரு சில சீன்களின் வருவாரா என்பது கேள்வியாக இருக்கிறது.