ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
காவிரி விவகாரத்தில் ரஜினி கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் காலா படத்தை திரையிட தடை விதித்திருக்கிறது கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை. இதுப்பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ்,
மனிதனுக்கும் ஆற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் தான் காவிரி விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடுகிறோம். இந்த விவகாரத்தில் இருமாநில மக்களின் உணர்வுகளும் இப்படித்தான் இருக்கும். இருமாநில அரசுகளும், சட்ட வல்லுநர்களும் இணைந்து நமது விவசாய பிரச்னைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச்சூழலில் காலா படத்தை திரையிடாமல் தடுப்பதால் நாம் என்ன செய்ய போகிறோம். ரஜினி கூறிய கருத்து நம்மை பாதித்துள்ளது உண்மைதான், ஒப்புக்கொள்கிறேன். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன. இதுதான் கன்னட மக்களான நாம் வேண்டுவதா?
ஒருவேளை படம் வெளியாகி அதை மக்கள் புறக்கணித்தால் அப்போ தெரியும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று. ஆனால், மக்கள் சார்பாக இதுபோன்ற சமூகவிரோதிகள் தீர்மானிக்கிறார்கள் நமக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாதென்று.
மக்களுக்கு இது வேண்டும்; இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார்? நடிகர் கூறிய கருத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லாத தயாரிப்பாளரின் முதலீடு என்னாவது? படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களில் இருந்து விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள், போஸ்டர் ஒட்டும் நபர் என திரைப்படம், மற்றும் அதை சார்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை பற்றியும் சந்திக்க வேண்டும்.
வாகனங்கள் எரிப்பு, பொருள்களை சேதப்படுத்துவது என வன்முறைகள் நீண்டால் இருமாநில மக்களிடையேயான நல்லிணக்கம் குலைந்துபோகும். நமது உணர்ச்சிகளைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட பின்னர், இந்தச் சமூக விரோதிகள் எங்கு செல்வார்கள்? இறுதியில் நாமே காயமடைந்து, அந்த காயத்துடன் வாழ வேண்டியிருக்கும்.
இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.