ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் ஜெயசூர்யா நடிப்பில் 'கேப்டன்' என்கிற படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படம் கேரளாவின் மறைந்த முன்னாள் புட்பால் விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
சமீபத்தில் இந்தப்படத்தில் நடித்தது குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் ஜெயசூர்யா. இந்தப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கியபோது, கதையின் நாயகன் வி.பி.சத்யனாகவே மாறிவிட்ட ஜெயசூர்யா, கதாநாயகியாக நடித்த அனு சித்தாராவை பலமாக அறைந்து விட்டாராம்.
காட்சி நன்றாக படமானாலும், நாயகியை, ஒரு பெண்ணை அறைந்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியால் தொடர்ந்து அனு சித்தாராவின் முகம் பார்த்து பேசவே வெட்கப்பட்டாரம் ஜெயசூர்யா. ஆனால் அனு சித்தாரவோ, நீங்கள் செய்தது வெறும் நடிப்புக்காகத்தானே என சமாதனப்படுத்தியதும் தான் இயல்பாக பேச ஆரம்பித்தாராம்.