நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
சில வருடங்களுக்கு முன்பு வரை மலையாளத் திரையுலகுடன் தனது நடிப்புத் எல்லையை சுருக்கிக் கொண்டிருந்தார் நடிகர் பஹத் பாசில். கடந்த இரண்டு வருடங்களில் தமிழில் விக்ரம், மாமன்னன், தெலுங்கில் புஷ்பா என மூன்று படங்களின் மூலம் தென்னிந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தில் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் இன்னொரு பரிமாணத்தையும் காட்டியுள்ளார். அனேகமாக துல்கர் சல்மானை போல வரும் நாட்களில் இவரும் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் ஹாலிவுட் படம் ஒன்றில் ஆடிசனில் தான் கலந்து கொண்டது பற்றி சமீபத்தில் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் பஹத் பாசில். மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தயாரிக்கும் படத்தின் ஆடிசனில் தான் கலந்து கொள்ள சென்றதாகவும் அங்கே அந்தப்படத்தின் கதை பற்றி எதுவும் சொல்லப்படாமல் நடிக்கும் காட்சிக்கான விளக்கமும் எதுவும் சொல்லப்படாமல் ஒரு காட்சியை நடித்துக் காட்டும்படி கூறினார்களாம். பஹத் பாசிலும் அந்த காட்சியை உள்வாங்கி தனது பாணியில் நடித்துக் காட்டினாராம்.
ஆனால் வேற்று மொழியில் ஒரு முதல் படத்திற்கான ஆடிசனில் கலந்து கொள்வது போல இல்லாமல் அங்கு இருப்பவர்கள் ஆடிசனில் பங்கேற்ற கலைஞர்களை ரொம்பவே ஈசியாக உணருமாறு பார்த்துக் கொண்டார்கள் என்று கூறியுள்ளார் பஹத் பாசில். இத்தனை நாட்கள் இதுபற்றி நான் வெளியே சொன்னதே இல்லை என்றும் கூறியுள்ளார். அந்த படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகி உள்ளாரா அல்லது ஆடிசனோடு அவரது பங்களிப்பு முடிந்து விட்டதா என்பதை பற்றி அவர் எதுவும் கூறவில்லை.