அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

தெலுங்கு திரையுலகில் கடந்த சில வருடங்களுக்குள்ளாகவே முன்னணி இளம் நடிகர்களில் முக்கிய நடிகர், அதிலும் பான் இந்திய நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு இந்திய அளவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. தற்போது அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் பிரபாஸ் ஒரு பக்கம் கல்கி படத்திலும் இன்னொரு பக்கம் இயக்குனர் ராஜா ஸாப் படத்திலும் மாறி மாறி நடிக்க வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு 35 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார் பிரபாஸ். சமீபத்தில் நடைபெற்ற இயக்குனர் சங்க கூட்டத்தின்போது இந்த தகவல் அங்கிருந்த நிர்வாகிகள் மூலமாக வெளியாகி உள்ளது. மறைந்த பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவின் பெருமையை கொண்டாடும் விதமாக வரும் மே நான்காம் தேதி வருடாந்திர இயக்குனர் தினத்தன்று ஐதராபாத்தில் உள்ள எல்.பி ஸ்டேடியத்தில் ஒரு மிகப்பெரிய கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நடத்தப்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தான் பிரபாஸ் அளித்த நன்கொடை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.