ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபுசாலமன் தற்போது கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதில் மதிவாணன் என்ற புதுமுகம் நடித்து வருகிறார். அவருடன் அதிதி மேனன் நடித்து வருகிறார். படத்தை பற்றிய எந்த தகவலும் வெளிவராமல் கவனமாக இருக்கிறார்கள். தாய்லாந்து காடுகளில் யானைகள் தொடர்பான படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் கும்கி 2ம் பாகத்தில் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதிகளின் மகள் ஷிவானி நடிப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கான போட்டோ ஷூட்டும் நடந்ததாக கூறப்பட்டது. அதிதி மேனன் நடித்தாலும் இன்னொரு ஹீரோயினாக ஷிவானி நடிப்பார் என்றே கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஷிவானி தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் கபூர், ஆலியா படம் நடித்த ஹிந்திப்படமான 2 ஸ்டேட் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் ஆலியாபட் நடித்த கேரக்டரில் ஷிவானி நடிக்கிறார். அர்ஜுன் கபூர் கேரக்டரில் ஆத்விசேஷ் நடிக்கிறார், வெங்கட் ரெட்டி இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது.