கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மிஷ்கின் தயாரித்து, நடித்துள்ள படம் சவரக்கத்தி. அவரே கதை திரைக்கதை வசனமும் எழுதியுள்ளார். அவரது தம்பி சி.ஆர்.ஆதித்யா இயக்கி உள்ளார். ராம், பூர்ணா, அஷ்வத், மோகன் ஆதேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் விளம்பரங்களில் மிஷ்கினின் சவரக்கத்தி என்றும், கதை திரைக்கதை, தயாரிப்பு மிஷ்கின் என்றும் பெரிய எழுத்துக்களில் போட்டுவிட்டு, இயக்குனர் ஆதித்யாவின் பெயரை சின்னதாக போட்டுள்ளனர். நேற்று நடந்த படத்தின் அறிமுக விழாவில் இதுகுறித்து வருத்தப்பட்டு பேசினார் இயக்குனர் ஆதித்யா. "நான் அடுத்த படம் எடுத்தால் படத்துக்கு பெயரையே "ஆதித்யா படம்" என்று வைப்பேன்" என்றார் இதற்கு பதிலளித்து மிஷ்கின் பேசியதாவது:
நான் என்னுடைய தம்பியும், இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள் தான் காரணம். என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால் தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள். எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடிக்காது. நான் இறந்த பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னை பற்றியும், நான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினால் போதும்.
எனக்கு சவரகத்தி படத்தின் மூலம் எந்த லாபமும் இல்லை. எனக்கு எந்த லாபமும் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த படம் வெற்றி பெற்றால் அதற்கு 90 சதவிகித காரணம் பூர்ணா. பத்து சதவிகிதம் ராம். வெற்றியை நான் பூர்ணாவுக்கு சமர்பிக்கிறேன். வெற்றி பெற்ற அன்றே சவரக்கத்தி இரண்டாம் பாகம் கதை அறிவிப்பேன். அவ்வளவு கதைகள் கைவசம் இருக்கிறது. என்றார் மிஷ்கின்.