கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் |
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் வந்த பின்னர், அதில் பொய்யான பல விஷயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதிலும் பிரபலங்களை பற்றி சில தவறான செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன.
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் பி.வாசு. இவர் இறந்துவிட்டதாக விஷமிகள் சிலர், சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பகிர்ந்துள்ளனர். இதையடுத்து பி.வாசு என்னவாயிற்று, ஏதுவாயிற்று என்று அவரை நோக்கி போன் கால்கள் பறக்க, நான் நலமுடன் இருக்கிறேன் என்று ஒவ்வொருவருக்கும் சொல்லியிருக்கிறார்.
இதுதொடர்பாக பி.வாசுவே வெளியிட்ட வீடியோ விபரம் வருமாறு.... என் மீது அன்பு வைத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் வணக்கம். என்னைப்பற்றிய வதந்தியை நானே கேள்விப்பட்டேன். எனக்கே வாட்ஸ் அப் வந்தது. நான் ஜிம்முக்கு போய்விட்டு, வாக்கிங் முடிந்து வந்தேன். அப்போது தான் இந்த செய்தி வந்தது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை, எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் எவ்வளவு பேர் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. நான் நலமாக, மிகவும் நலமாக உள்ளேன், ஆரோக்கியமாக உள்ளேன். இந்தாண்டு மூன்று படங்கள் இயக்க உள்ளேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.