ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை |

ஜெயம் படம் தான் மோகன்ராஜா - ஜெயம் ரவி சகோதரர்களுக்கு முதல் படம்.  தொடர்ந்து ஜெயம்ரவியை வைத்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த மோகன்ராஜா, தனி ஒருவன் படத்தை சொந்த கதையில் இயக்கினார். அந்த படம் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் படத்தை இயக்கினார்.  அப்படம் தனி ஒருவனைப் போன்று மெகா ஹிட்டாகவில்லை என்றபோதும் ஓரளவு வசூலித்தது.
அடுத்தபடியாக சிம்பு நடிக்கும் படத்தை மோகன்ராஜா இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், மீண்டும் தம்பி ஜெயம் ரவியை நாயகனாக வைத்து, அவரது 25வது படத்தை  இயக்குகிறார் மோகன்ராஜா. தனி ஒருவனைப் போன்று ஒரு சமூக நோக்கமுள்ள கதையை அந்த படத்திற்காக தயார் செய்யும் வேலைகளை தொடங்கியிருக்கிறாராம் மோகன்ராஜா. அநேகமாக இது தனி ஒருவன் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என தெரிகிறது. 
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            