ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
2015ல் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‛தனி ஒருவன்'. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்தார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். அது மட்டுமல்ல முதன்முறையாக ரீமேக் என்கிற ஏரியாவில் இருந்து வெளியே வந்து தனியாக கதையை உருவாக்கி வெற்றி வாகை சூடினார் இயக்குனர் மோகன்ராஜா. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வரவேற்பு பெற்றன. குறிப்பாக ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்த கண்ணால கண்ணால என்கிற பாடல் ரசிகர்களின் பேவரைட் பாடலாக மாறியது. இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதியே எழுதி இருந்தார்.
இந்த படம் வெளியாகி 8 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது 100 கோடி பார்வையாளர்களால் இந்த பாடல் பார்க்கப்பட்டு புதிய சாதனையை செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் மோகன்ராஜா, "இதுதான் இந்தப் படத்திற்காக எனக்கு நீங்கள் மேற்கொண்ட முதல் பணி. அப்போது இந்த பாடலைக் கேட்டுவிட்டு நான் எவ்வளவு ஸ்தம்பித்து போய் நின்றேன் என்பது உங்களுக்கு தெரியும்' என்று பழைய நினைவுகளை குறிப்பிட்டு படத்தின் இசையமைப்பாளரும், இந்த படத்தின் பாடலாசிரியருமான ஹிப் ஹாப் ஆதிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.