ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 2015ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛தனி ஒருவன்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக ஏற்கனவே மோகன் ராஜா அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது. தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று(ஆக., 28) இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை புரொமோ வீடியோ உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படத்தை மோகன் ராஜா இயக்க, ஜெயம் ரவி, நயன்தாரா தொடருகின்றனர். முதல்பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கின்றனர்.
புரொமோ வீடியோவில் முதல்பாகத்தில் சித்தார்த்தாக நடித்த அரவிந்த் சாமி இறந்து போய் விடுவார். அவர் கொடுத்த மிகப்பெரிய குளூவை வைத்து இரண்டாம் பாகம் கதையை மோகன் ராஜா தயார் செய்வது போன்று வீடியோவில் உள்ளது. அதில் மித்ரன் ஆன ஜெயம் ரவி ஒவ்வொரு ஆயுதமாக எடுக்கிறார். பின்னர் ஏதோ ஒரு குழப்பத்தால் அதை வைத்து விடுகிறார். எதிரிக்காக காத்திருக்கும் ஜெயம் ரவிக்கு ஒரு பேக்ஸ் வருகிறது. அதில் எதிரி யார் என்று குறிப்பிடவில்லை. நான் ஏன் இன்னும் என் எதிரியை தேடி போகல என்று ஜெயம் ரவி கேட்க, அதற்கு மோகன் ராஜா இந்த கதையில் எதிரியே உன்னை தேடி வருவான் என கூறுகிறார்.
முதல்பாகத்தில் எதிரியை தேடி ஜெயம் ரவி செல்வார். இந்த பாகத்தில் எதிரி இவரை தேடி வருகிறாராம். முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவுக்கு நிகரான வில்லன் ரோல் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதில் யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இப்படி படத்தின் துவக்க புரொமோவிலேயே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
தனி ஒருவன் 2, மோகன் ராஜாவிற்கு 11வது படமாகும். தனது தம்பி ஜெயம் ரவி உடன் இது 7வது படம். நயன்தாரா உடன் இது 4வது படம். ஏஜிஎஸ் உடன் இது 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=U3vBNFPZYCY&feature=youtu.be