'எம்புரான்' தயாரிப்பாளர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை | சினிமா மோகத்தால் சீரழியும் பெண்கள்.... எங்கே செல்லும் இந்த பாதை! | குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி |
என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ரிலீஸூக்கு தயாராகி வரும் படம் 'இறைவன்'. ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்தனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தை வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே தேதியில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சலார்' திரைப்படமும் வெளியாகிறது.