ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகி இருப்பவர் நடிகர் கவின். தற்போது இளன் இயக்கத்தில் கவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இன்று இந்த படத்திற்கு 'ஸ்டார்' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். கூடுதலாக, இப்படத்தின் சிறப்பு முன்னோட்ட வீடியோ ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நடிப்பதாக அறிவித்தனர். பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது. ஆனால் சில பிரச்னைகளால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதில் அதே கதையை கவினை வைத்து இயக்கி உள்ளார் இளன். படத்தின் தலைப்பையும் ஸ்டார் என்றே வைத்துள்ளார்.