2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இந்தாண்டு பொங்கலுக்கு தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‛சங்கராந்திகி வஸ்துனம்'. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தற்போது ஹிந்தியில் ரீ-மேக் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. தயாரிப்பாளர் தில் ராஜூவே ஹிந்தியிலும் அங்குள்ள தயாரிப்பாளர் ஒருவருடன் இணைந்து தயாரித்து, ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். ஹிந்தியில் ‛பூல் புல்லையா 2 மற்றும் 3ம் பாகங்களை இயக்கிய அனீஸ் பாஸ்மி இயக்குகிறார். இதில் ஹீரோவாக அக் ஷய் குமாரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். கமர்ஷியல் விஷயங்களுடன் காமெடி சார்ந்த அம்சங்களும் இந்த கதையில் இருப்பதால் அக் ஷய் குமார் உறுதியாக நடிப்பார் என்கிறார்கள்.