Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் வாழ்வை சீரழித்த சீமானை கைது செய்யுங்கள் : போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார்

29 ஆக, 2023 - 10:17 IST
எழுத்தின் அளவு:
Arrest-Seeman-who-ruined-my-life:-Actress-Vijayalakshmi-complains-to-the-police

சென்னை : 'ஆசைவார்த்தை கூறி, திருமணம் செய்து கணவன் - மனைவியாக வாழ்ந்து விட்டு, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து, என் வாழ்வை சீரழித்த சீமானை கைது செய்ய வேண்டும்' என நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகார் :

உதவியும் செய்யவில்லை
சென்னை, தி.நகரில் என் சகோதரி உஷா தேவி வீட்டில் தங்கி சினிமா படங்களில் நடித்து வந்தேன். தற்போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான் இயக்கிய, வாழ்த்துகள் என்ற படத்தில் நடித்தேன். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. என் சகோதரியை அவரது கணவர் அடித்து துன்புறுத்தினார். இதுதொடர்பாக உஷாதேவி 2008ல், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சகோதரியின் கணவர், அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால், சீமானின் உதவியை நாடினோம். அவர் எங்களுக்கு சட்ட ரீதியாக, எந்த உதவியும் செய்யவில்லை.

திருமண ஆசை
ஒரு நாள், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள, நாம் தமிழர் கட்சி அலுவலகத்திற்கு என்னை வரவழைத்தார். 'எனக்கு யாரும் இல்லை. உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்' எனக் கூறினார். என் சகோதரி மற்றும் தாயிடம் கேட்டுச் சொல்வதாக கூறி விட்டேன். அதன்பின், என் தாய் மற்றும் சகோதரியை சந்தித்த சீமான், 'உங்கள் குடும்பத்தில் ஒருவனாக உறுதுணையாக இருப்பேன். விஜயலட்சுமியை எனக்கு திருமணம் செய்து தாருங்கள்' என, கேட்டார். ஒரு கட்டத்தில், எங்கள் உறவினர்களும் திருமணம் செய்து வைப்பது என, முடிவு செய்தனர்.



தாலி கட்டாமல் திருமணம்
அப்போது, இலங்கை தமிழர் போராட்டம் தொடர்பாக, சீமான் கைதாகி, ஜாமினில் வெளிவந்த பின், மதுரையில் தங்கி இருந்தார். என்னை தொடர்பு கொண்டு, 'அநாதை போல இருக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் நீங்கள் என்னுடன் இருந்தால், ஆறுதலாக இருக்கும்' என, கூறி விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து, மதுரைக்கு வரவழைத்தார். சீமான் மற்றும் அவருடன் இருந்தவர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு சீமான் என் கழுத்தில் மாலை சூடினார். 'நான் ஈ.வெ.ராமசாமி கொள்கைகளை பின்பற்றுபவன். அதை விட, நான் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவன். அதனால், தாலி கட்ட முடியாது' என, மறுத்து விட்டார்.

அதன்பின், சென்னைக்கு வந்து, என் வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். 'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் முன்னிலையில், நம் இருவருக்கும் திருமணம் நடக்கப் போகிறது. அதை உலகமே பார்த்து வியக்கப் போகிறது' என, கூறினார். பெரியோர் ஆசியுடன் எங்களுக்கு சாந்திமுகூர்த்தம் நடந்தது; நான், ஏழு முறை கருவுற்றேன்.



கருக்கலைப்பு
'அரசியலில் நான் பெரிய ஆளாக வர வேண்டும். அதனால், இப்போதைக்கு குழந்தை வேண்டாம்' என, கூறி, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார். ஒரு நாள் தேன்மொழி என்ற நபர், என்னை தொடர்புகொண்டு, சீமானுக்கும், தனக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறினார். அதுபற்றி, இயக்குனர் சேரனிடம் கேட்டேன். அவரும் உண்மைதான் என்றார். சீமானிடம் கேட்ட போது, மழுப்பலான பதில் அளித்தார்.

இதற்கிடையில், என்னுடன் குடும்பம் நடத்தியபடியே, கயல்விழி என்ற பெண்ணையும் திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார். இது எனக்கு பின்பு தான் தெரிந்தது. 'நீ தான் என் மனைவி' எனக் கூறி, குடும்பம் நடத்தி விட்டு, ரொக்கப் பணம், 60 லட்சம் ரூபாய், 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் பறித்துக் கொண்டார். அது பற்றி கேட்டால், போதையில் அடித்து துன்புறுத்தி வந்தார். சீமானால் தற்கொலைக்கு முயன்றேன். அவர் மீது, அ.தி.மு.க., ஆட்சியில் புகார் அளித்தேன். வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.



கைது செய்ய வேண்டும்
தடா சந்திரசேகர் என்பருடன் சேர்ந்து, என்னை மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் வைத்துக் கொள்வதாக கூறிய சீமான், புகார் மீது மேல் நடவடிக்கை வேண்டாம் என, எழுதி கொடுக்க வைத்து விட்டார். கயல்விழி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகள் என்பதால், அ.தி.மு.க., ஆட்சியில், எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. தற்போது, தி.மு.க., ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என, புகார் அளித்துள்ளேன். என்னுடன் குடும்பம் நடத்தி, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து, என் உடலையும், மனதையும் கெடுத்து, தற்கொலைக்கு துாண்டி, என் வாழ்வை சீரிழித்த சீமானை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்குவாதம்
பின், விஜயலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்தார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
கவின் நடிக்கும் ஸ்டார்கவின் நடிக்கும் ஸ்டார் 'ஜெயிலர்' பட காட்சியை நீக்க கோர்ட் உத்தரவு 'ஜெயிலர்' பட காட்சியை நீக்க கோர்ட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

GANESUN - Chennai,இந்தியா
30 ஆக, 2023 - 09:31 Report Abuse
GANESUN தண்ணிதொட்டியும்.. பள்ளி பூட்டுமே கண்டுபிடிக்க முடியல அதுக்கு பொங்கல..இந்த கேஸ் தான் உபிங்களுக்கு முக்கியமாம். பாவம் ஓட்டு போட்டவங்க
Rate this:
GANESUN - Chennai,இந்தியா
30 ஆக, 2023 - 09:27 Report Abuse
GANESUN இப்ப உபிஸ்கெல்லாம் இந்த பக்கம் வந்து பொங்குவாங்க... எப்பெல்லாம் விடியலுக்கு மடைமாற்றம் தேவை படுகிறதோ அப்பெல்லாம் நடிகைகள் தான் மீடியா ஹைலைட்... "கதவ திற கேமரா வரட்டும்" விஷயம்கூட அப்படித்தான்..நடந்தது.
Rate this:
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
30 ஆக, 2023 - 08:22 Report Abuse
R.PERUMALRAJA இந்த விவகாரம் உண்மை எனில் மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்து இருக்கலாமே
Rate this:
Godyes - Chennai,இந்தியா
29 ஆக, 2023 - 19:18 Report Abuse
Godyes சிறுபான்மைக்கு திமிர் அதிகம். இவர்களது சிறு பான்மை பாது காப்பை எடுத்து விடவேண்டும்.
Rate this:
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
29 ஆக, 2023 - 19:05 Report Abuse
தாமரை மலர்கிறது சீமான் வயிற்றை கழுவதற்காக அரசியல் நடத்திவருகிறார். அவரே பிச்சை எடுத்து கோடிகளில் சம்பாரித்து வருகிறார். அதில் பாதியை எந்த உழைப்பும் போடாமல், முன்பு போட்ட உழைப்பை சொல்லி, இந்த பெண்மணி சுரண்ட நினைத்தால், சீமான் எப்படி கொடுப்பார்? பிச்சைக்காரனிடம் பிச்சை எடுப்பது, ரொம்ப கடினம். திருடனிடம் திருடுவது ரொம்ப கஷ்டம்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in