குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
ரஜினி நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் 'ஜெயிலர்'. 500 கோடி வசூலை தாண்டி தற்போதும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு கேரக்டர் ஆர்சிபி ( ராயல் சேலன்ஞ்சர் பெங்களூரு) என்ற ஜெர்சியை அணிந்து நடித்திருப்பார். அவர் பெண்களுக்கு எதிரான சில கருத்துக்களை கூறுவார்.
"இந்த காட்சியில் சம்பந்தப்பட்ட நபர் எங்கள் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு பெண்களுக்கு எதிராக பேசுவதால் எங்கள் அணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த காட்சியை நீக்க வேண்டும்" என்று ராயல் சேலன்ஞர்ஸ் அணியின் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீமன்றம் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட காட்சியை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார். அதோடு தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படம் ஒளிபரப்பாகும்போது இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.